பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் பாதுகாப்பு கான்வாய் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு சிறுமி குறுக்கே ஓடி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த வாகனங்களுக்கு முன்னால் அந்தச் சிறுமி திடீரென வந்ததைக் கண்டு அங்கிருந்தவர்கள் அலறினர். ஒரு நொடி தாமதித்திருந்தாலும் அந்தப் பிஞ்சு உயிர் வண்டிச் சக்கரத்தில் சிக்கிப் பலியாகியிருக்கும்.

ஆனால், அந்த இக்கட்டான சூழலில் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் செய்த காரியம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. ​தன்னுடைய உயிரைப் பற்றியும் கவலைப்படாமல், மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று அந்தச் சிறுமியை வண்டிக்கு முன்னால் செல்லாமல் தடுத்தார்.

தற்போது சமூக வலைதளங்களில் இந்த வீடியோ காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், அந்தப் பெண் போலீஸ் அதிகாரியை “நிஜ வாழ்க்கை சூப்பர் ஹீரோ” என நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். ஒரு நிமிடம் இதயம் நின்று துடித்த அந்தப் பதற்றமான சூழலில், ஒரு உயிரைக் காப்பாற்றிய அந்தப் பெண்ணின் துணிச்சல் இப்போது தேசம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.