வெயில் கொடுமை தாங்காமல் மனிதர்களே திணறி வரும் நிலையில், தர்பூசணிகளுக்கு ‘எமர்ஜென்சி’ சிகிச்சை அளிப்பது போல ஒரு விசித்திரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆம்புலன்ஸ் ஒன்றில் தர்பூசணிகளை ஏற்றிக்கொண்டு வந்து, அதை மார்க்கெட்டில் வைத்து விற்பனை செய்யும் காட்சிகளைப் பார்த்து நெட்டிசன்கள் வாயடைத்துப் போயுள்ளனர். அவசர சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய வாகனத்தை, இப்படிப் பழங்கள் விற்கப் பயன்படுத்திய அந்த நபரின் ‘துணிச்சலை’ பலரும் விமர்சித்தும், கிண்டலடித்தும் வருகின்றனர்.
#Breaking 🚨 गर्मी के कारण तरबूज़ों 🍈🍈🍈🍈🍈 की हालत बिगड़ गई, और पलक झपकते ही उन्हें एम्बुलेंस से बाज़ार पहुँचाया गया। वीडियो वायरल 😜😜😂😂#Watermelon #Ambulance #Vegetable #Mandi #viralvídeo pic.twitter.com/vXGLTeQLgG
— Journalist Jyoti magan 🇮🇳 (@jyotimagan555) March 24, 2026
”சைரன் சத்தம் கேட்டு உயிருக்கு போராடும் நோயாளிதான் வராருன்னு நினைச்சு வழிவிட்டா, உள்ளே தர்பூசணி வியாபாரம் நடக்குது” என நெட்டிசன்கள் வேடிக்கையான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். ஆம்புலன்ஸை இப்படித் தவறாகப் பயன்படுத்தியது ஒருபுறம் சட்டப்படி குற்றமாக இருந்தாலும், வெயிலின் தாக்கத்தால் பழங்கள் கெட்டுப்போகக் கூடாது என்பதற்காக மின்னல் வேகத்தில் மார்க்கெட்டுக்குக் கொண்டு வரப்பட்ட இந்த ‘ஐடியா’ இப்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்த வீடியோ எக்ஸ் (X) தளத்தில் லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து ட்ரெண்டாகி வருகிறது.
