அர்ஜென்டினாவின் பார்மோசா பகுதியில் உள்ள ஒரு பூங்காவில், யாராலும் கற்பனை செய்ய முடியாத ஒரு துரோகம் நடந்தேறியிருக்கிறது. தனது காதலன் என்ன செய்கிறான் என்று சந்தேகம் கொண்டு அவனைத் தேடிச் சென்ற அந்தப் பெண், பூங்காவில் ஒரு மரத்தடியில் அவன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அருகே சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சியில் இதயம் நின்று துடித்தது. தன் காதலனுடன் நெருக்கமாகச் சல்லாபித்துக் கொண்டிருந்தது, தான் உயிரே என்று நம்பிப் பழகி வந்த தனது ‘பெஸ்ட் ஃப்ரெண்ட்’ என்பது தெரியவந்ததும் அந்த இடமே ஸ்தம்பித்தது.

​பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள அந்தப் பூங்காவில், யாருடைய பயமும் இன்றி அவர்கள் இருவரும் செய்த இந்தச் செயல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. நட்பின் பெயரால் பழகிவிட்டு, காதலில் குத்துவெட்டு வேலை செய்த தோழியின் இந்தச் செயலைத் தாங்க முடியாமல் அந்தப் பெண் காட்டிய கோபமும், அங்கிருந்தவர்களின் அதிர்ச்சியும் இந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

“நம்பிக்கை துரோகம் செய்வதற்கு இடம் பொருளா முக்கியம்? இது போன்ற துரோகிகளைப் பொது இடத்தில் வைத்துத் தட்டிக் கேட்பதுதான் சரி” எனப் பலரும் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாகவும், அந்தத் தோழியைச் சாடியும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.