தலைநகர் டெல்லியின் தெருக்களில் அரங்கேறிய ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சிகரமான ‘சுத்தப்படுத்தும்’ படலம் இப்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நள்ளிரவு நேரங்களில் சாலை ஓரங்களில் நின்று தொழில் செய்யும் பெண்களை, ஒரு கும்பல் இளைஞர்கள் கையில் தடியுடன் துரத்தி அடிக்கும் காட்சிகள் சிசிடிவி மற்றும் செல்போன் கேமராக்களில் பதிவாகியுள்ளன.

“பகுதியைச் சுத்தம் செய்கிறோம்” என்ற பெயரில் அந்த இளைஞர்கள் செய்த இந்த அதிரடி வேட்டை, பார்ப்பவர்களை ஒரு நிமிடம் திகைக்க வைத்தது. தடியைக் கண்டதும் அந்தப் பெண்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடியது அந்த இடத்தையே போர்க்களம் போல மாற்றியது.

​இந்த மோதலை வேடிக்கை நிகழ்ச்சி போல ரசித்துப் பார்த்ததுதான் இதில் ஹைலைட். “இரவு நேர தொழிலாளர்களுக்கும்” அந்த “இளைஞர் கும்பலுக்கும்” இடையே நடந்த இந்த சண்டை, டெல்லி மக்களைப் பொறுத்தவரை ஒரு பொழுதுபோக்குச் சம்பவமாகவே பார்க்கப்பட்டது.

ஒருபுறம் ஒழுக்கத்தைக் காப்பாற்றுகிறோம் என இளைஞர்கள் துரத்துவதும், மறுபுறம் பிழைப்புக்காகப் போராடும் பெண்களின் அலறலும் கலந்த இந்த வீடியோ, தற்போது எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் வைரலாகி வருகிறது. “இது என்னப்பா புது விதமான கிளீனிங் டிரைவ்?” என நெட்டிசன்கள் இந்தச் சம்பவத்தைக் கலாய்த்தும், விவாதித்தும் வருகின்றனர்.