சர்வதேச அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு கோர விபத்து வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆற்றில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பெரிய படகில் (Ferry), ஒரு பேருந்தை ஏற்ற முயன்றபோது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் தலைகுப்புற விழுந்தது.

பேருந்து படகின் விளிம்பிற்கு வந்தபோது திடீரென நிலைதடுமாறி தண்ணீரில் மூழ்கியதில், உள்ளே இருந்த 23 பயணிகள் வெளியே வர முடியாமல் துடிதுடிக்க உயிரிழந்தனர்.

p>

இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. பேருந்து தண்ணீரில் விழுந்த சில நொடிகளிலேயே முழுமையாக மூழ்கிவிட்டதால், மீட்புப் படையினர் வருவதற்குள் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டுவிட்டது.

பாதுகாப்பு விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றாததே இந்த விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.