மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிற்கு வரும் எரிபொருள் மற்றும் சரக்குக் கப்பல்களைப் பாதுகாப்பாக அழைத்து வர இந்திய கடற்படை ‘ஆபரேஷன் ஊர்ஜா சுரக்ஷா’ என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இதற்காக ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) அருகே 5-க்கும் மேற்பட்ட அதிநவீன போர்க்கப்பல்களை இந்திய கடற்படை அதிரடியாக நிலைநிறுத்தியுள்ளது.

கடல் வழியே வரும் இந்தியாவின் வர்த்தகப் போக்குவரத்திற்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்கவும், தாக்குதல்களில் இருந்து கப்பல்களைப் பாதுகாக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.