நாசிக் பகுதியில் ஆன்மீகம் என்ற பெயரில் பெண்களைச் சீரழித்து, கோடிக்கணக்கில் மோசடி செய்த ‘போலி சாமியார்’ அசோக் கராத்தின் ஜாதகத்தை மகாராஷ்டிர போலீஸார் தற்போது புட்டுப் புட்டு வைத்துள்ளனர். 1965-ல் பிறந்த இவர், தனது 17 வயதிலேயே உறவுமுறைப் பெண் ஒருவரைச் சீரழித்து ஊரை விட்டு ஓடியவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மெர்ச்சன்ட் நேவியில் கேப்டனாக இருப்பதாக ஊரை நம்ப வைத்த இவர், உண்மையில் அங்கு ஒரு சாதாரண தொழிலாளியாகவே பணிபுரிந்துள்ளார்.

கொல்கத்தாவில் தங்கியிருந்தபோது ‘மந்திரவாதம்’ கற்றுக்கொண்டதாகக் கூறி, 1997-ல் நாசிக்கில் ஒரு அலுவலகத்தைத் திறந்து பக்தர்களை ஏமாற்றத் தொடங்கியுள்ளார்.

பள்ளிப் பருவத்தில் தனது வீட்டில் இருந்த கோழி முட்டைகளைத் திருடி விற்றதால், இவரைப் பள்ளியில் ‘கோழி திருடன்’ (Kombadi Chor) என்று சக மாணவர்கள் கிண்டல் செய்வார்களாம்.

தற்போது இவர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் பண மோசடி என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி, சிட் (SIT) போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.