சமீபகாலமாக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாகப் பலரும் இண்டக்ஷன் அடுப்புகளுக்கு மாறி வரும் நிலையில், மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ந்த ஒரு விபத்து அனைவரையும் உறைய வைத்துள்ளது. ஒரு பெண்மணி தனது சமையலறையில் இண்டக்ஷன் அடுப்பில் ரொட்டி சுட்டுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்த அடுப்பு பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இந்தச் சம்பவத்தின் போது அந்தப் பெண்ணின் சிறு குழந்தை மிக அருகிலேயே அமர்ந்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் கணவர் இந்தத் தருணத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
View this post on Instagram
அதிர்ஷ்டவசமாகத் தாயும் குழந்தையும் காயமின்றி உயிர் தப்பினர் என்றாலும், அடுப்பின் கண்ணாடித் துகள்கள் நாலாபுறமும் சிதறிய விதம் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது.
தரம் குறைந்த மின்சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்த வைரல் வீடியோ ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
