மத்திய கிழக்கில் போர் பதற்றம் தணியாத நிலையில், அமெரிக்கா முன்வைத்த 15 அம்ச சமாதானத் திட்டத்தை ஈரான் அதிரடியாக நிராகரித்துள்ளது டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் தூதரகத்தின் வழியாகத் தெரிவிக்கப்பட்ட இந்த முன்மொழிவை “ஏற்க முடியாத நிபந்தனைகள்” என முத்திரை குத்தியுள்ள ஈரானிய அரசு, “நாங்கள் விரும்பும் போதுதான் இந்தப் போரை நிறுத்துவோம்” என ஆவேசமாகத் தெரிவித்துள்ளது.

பதிலுக்கு அமெரிக்காவிற்கு 5 கடுமையான நிபந்தனைகளை ஈரான் விதித்துள்ளது. அதில், ஈரான் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும், எதிர்காலத்தில் மீண்டும் தாக்கப்பட மாட்டோம் என்ற சர்வதேச உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் மற்றும் போரில் ஏற்பட்ட அனைத்து இழப்புகளுக்கும் முழுமையான நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்பவை முக்கிய அம்சங்களாகும்.

ஈரானின் இந்த பிடிவாதமான முடிவால் டிரம்பின் பதற்றம் அதிகரித்துள்ளதுடன், அமெரிக்கா அடுத்து எடுக்கப்போகும் ராணுவ நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.