வங்காளதேசத்தின் ராஜ்பாரி மாவட்டத்தில் உள்ள தௌலத்தியா படகு முனையத்தில், சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று பத்மா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை 5:15 மணியளவில் டாக்கா நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து, படகில் ஏறுவதற்காக மிதவைப் பாலத்தில் காத்திருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பின்னால் வந்த சிறிய படகு ஒன்று மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து 80 அடி ஆழ ஆற்றில் மூழ்கியது.

இந்தத் விபத்தில் 7 பெண்கள், 3 ஆண்கள் மற்றும் 2 குழந்தைகள் உட்பட மொத்தம் 14 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. விபத்தின் போது 11 பயணிகள் நீந்தி உயிர்தப்பிய நிலையில், பேருந்தின் ஜன்னல்கள் மூடப்பட்டிருந்ததால் மற்றவர்கள் உள்ளேயே சிக்கி உயிரிழந்ததாகத் தெரிகிறது.

“>

 

‘ஹம்சா’ மீட்புக் கப்பல் உதவியுடன் நள்ளிரவில் பேருந்து மேலே தூக்கப்பட்ட நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.