தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இந்தத் தொகுதியில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ (NDA) கூட்டணியில் பாமக களம் காண்கிறது.
அதே சமயம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இந்த பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகப் பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில், அதிமுக இந்த முறை இங்குப் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வட சென்னையில் பாமகவுக்கு உள்ள வாக்கு வங்கி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் பலத்தை வைத்து, விஜய்க்குப் பலமான சவாலைத் தர பாமக தலைமை திட்டமிட்டுள்ளது.
பெரம்பூர் தொகுதியைத் தங்களது கோட்டையாக மாற்ற அன்புமணி ராமதாஸ் இப்போதே காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளதால், இந்தத் தொகுதியின் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எகிறியுள்ளது.
