அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளின் பெயர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன் விவரம் இதோ:
- மயிலாப்பூர்
- தளி
- மொடக்குறிச்சி
- ஊட்டி
- அவிநாசி
- திருப்பூர் தெற்கு
- கோவை வடக்கு
- கந்தர்வகோட்டை
- புதுக்கோட்டை
- திருப்பத்தூர்
- மதுரை தெற்கு
- சாத்தூர்
- திருச்செந்தூர்
- வாசுதேவநல்லூர்
- விளவங்கோடு
- திருவண்ணாமலை
- ஆவடி
- தஞ்சை
- அறந்தாங்கி
- மானாமதுரை
- குளச்சல்
- பத்மநாபபுரம்
- ராசிபுரம்
- ராதாபுரம்
- நாகர்கோவில்
- திருவாரூர்
- ராமநாதபுரம்
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக 27 இடங்களில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூர், தஞ்சை மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினின் சொந்த மாவட்டமான திருவாரூர் உள்ளிட்ட முக்கியத் தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
ஏற்கெனவே விவாதிக்கப்பட்டது போல, வானதி சீனிவாசன் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தற்போது பிரதிநிதித்துவப்படுத்தும் கோவை தெற்கு மற்றும் நெல்லை தொகுதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாகக் கோவை வடக்கு மற்றும் ராதாபுரம் போன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
2021 தேர்தலை விட (20 இடங்கள்) இந்த முறை பாஜகவுக்குக் கூடுதல் இடங்கள் (27 இடங்கள்) வழங்கப்பட்டுள்ளது, கூட்டணியின் வலிமையை நிரூபிப்பதாகப் பார்க்கப்படுகிறது.
