தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணித் தொகுதிப் பங்கீட்டில் ஒரு மிகப்பெரிய ‘சஸ்பென்ஸ்’ உடைந்துள்ளது. தற்போது எம்.எல்.ஏ-க்களாக இருக்கும் வானதி சீனிவாசன் (கோவை தெற்கு) மற்றும் நயினார் நாகேந்திரன் (திருநெல்வேலி) ஆகியோரின் தொகுதிகள், பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வப் பட்டியலில் இடம்பெறவில்லை.

​இதனால், வரும் 2026 தேர்தலில் இவர்கள் இருவரும் தங்களின் தற்போதைய தொகுதிகளை விட்டுவிட்டு வேறு தொகுதிகளுக்கு மாறப்போவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. கோவை தெற்கு மற்றும் நெல்லை ஆகிய இரண்டு தொகுதிகளையும் அதிமுக தன்வசம் வைத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இது பாஜக மேலிடத்திலும், அந்தந்தத் தொகுதித் தொண்டர்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.