2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்குவதில் அதிரடி காட்டி வருகிறது.
குறிப்பாக, கடந்த 2021 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற அவிநாசி, கோவை வடக்கு, போளூர் மற்றும் மடத்துக்குளம் ஆகிய 4 முக்கிய தொகுதிகளைத் தற்போது கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளது.
இதில் அவிநாசி மற்றும் கோவை வடக்கு தொகுதிகள் பாஜக-விற்கும், போளூர் தொகுதி பாமக-விற்கும், மடத்துக்குளம் தொகுதி அமமுக-விற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
