ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இந்த மோதலைத் தடுத்து நிறுத்த அண்டை நாடான பாகிஸ்தான் தற்போது அதிரடியாகக் களமிறங்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த 15 அம்சங்கள் கொண்ட ஒரு தற்காலிக ஒப்பந்த வரைவை (Compromise Agreement) பாகிஸ்தான் அரசு தற்போது முன்மொழிந்துள்ளது.

உலகப் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி விநியோகம் பெரும் பாதிப்பைச் சந்தித்து வரும் சூழலில், இந்த 15 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் போரைத் தவிர்க்க முடியும் எனப் பாகிஸ்தான் தூதரக ரீதியாகத் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே எகிப்து போன்ற நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், பாகிஸ்தானின் இந்த 15 அம்சத் திட்டம் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மற்றும் ஈரான் தலைவர்களிடையே எந்தளவுக்கு எடுபடும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, ஹோமுஸ் ஜலசந்தி விவகாரத்தில் நிலவும் சிக்கல்களைத் தீர்க்க இந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய வழியாகப் பார்க்கப்படுகிறது.