ஒருவர் எந்தவொரு செயலையும் செய்யத் துணியாத ஒரு கஷ்டமான விஷயத்தை இந்த இளைஞர் செய்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினர்கள் சாப்பிட்டுவிட்டுத் தூக்கி எறிந்த எச்சில் தட்டுகளில் உள்ள மீதமான உணவை, அந்த இளைஞர் ஒரு சாக்குப்பையில் சேகரிக்கிறார். இந்தச் செயலின் ஆரம்பக் கட்டம் மிகவும் கடினமானதாக இருந்தாலும், அவர் சிறிதும் முகம் சுளிக்காமல் உணவை வீணாக்காமல் சேமிக்கிறார்.
इस भाई ने वो किया जिसे करने के लिए भारी जिगरा चाहिए होता हैं।
क्योंकि इस महान कार्य का शुरुआती कदम बड़ा ही कठिन था जिसे आदमी दस बार सोचता। pic.twitter.com/MdFCQBFo9i
— Jitu Rajoriya (@jitu_rajoriya) March 24, 2026
சேகரித்த உணவை பின்னர் தெரு நாய்களுக்கு உணவாகக் கொடுக்கிறார். இந்த நெகிழ்ச்சியான செயல் தற்போது எக்ஸ் (X) வலைதளத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “இந்த உணவை வீணாக்குவதை விட, பசியால் வாடும் தெரு நாய்களுக்குக் கொடுப்பது எவ்வளவு பெரிய புண்ணியம்” என்ற கருத்துடன் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ, அந்த இளைஞரின் மனிதநேயத்தைப் பறைசாற்றுகிறது. அவரது இந்த விடாமுயற்சியையும், பாசத்தையும் பாராட்டி நெட்டிசன்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
