குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு தந்தை படும் கஷ்டத்திற்கு இந்த உலகத்தில் எதனையும் ஈடாகச் சொல்ல முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ எக்ஸ் (X) வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வயதான பெரியவர் ஒருவர் தனது தலையில் வளையல் பெட்டியைச் சுமந்தவாறு, நடந்து சென்று வியாபாரம் செய்யும் காட்சி பதிவாகியுள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இதேபோல் நடந்தே சென்று வளையல் வியாபாரம் செய்து வரும் இவரது தன்னலமற்ற உழைப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உழைப்பால் வாழ்கிறார்
30 வருடங்களாக நடந்தே வளையல் வியாபாரம் செய்யும்
பெரியவர்குடும்பத்தைக் காப்பாற்ற அப்பாவின் தன்னலமற்ற உழைப்பிற்கு முன்னே ஈடு இணை ஈடு இணை எதுவும் இல்லை இவ்வுலகில் pic.twitter.com/JbYca7Lfpr
— Rajini (@rajini198080) March 24, 2026
வயதான காலத்திலும் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல், தனது உழைப்பால் வாழ்ந்து காட்டும் இந்தப் பெரியவரின் விடாமுயற்சி இளைய தலைமுறைக்கு ஒரு மிகப்பெரிய பாடமாக அமைந்துள்ளது. “அப்பாவின் உழைப்பிற்கு முன்னே இந்த உலகில் வேறொன்றும் பெரிதல்ல” என்ற கருத்துடன் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பலரது இதயங்களைத் தொட்டுள்ளது. இந்தப் பெரியவரின் தன்னம்பிக்கையையும், குடும்பத்தின் மீதான அக்கறையையும் பாராட்டி நெட்டிசன்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
