தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அங்குள்ள கேஸ் குடோன் முன்பாகக் காலி சிலிண்டர்களுடன் ஆண்கள் மற்றும் பெண்கள் எனப் பலரும் நீண்ட வரிசையில் பல மணி நேரமாகக் காத்திருக்கின்றனர்.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையோரம் வரிசையாக நின்று தங்களுக்கு எப்போது சிலிண்டர் கிடைக்கும் என வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.