பிரபல பழம்பெரும் நடிகர் சிவகுமார் சமீபத்தில் ஒரு பேட்டியில், மனைவியையும் நடிகைகளையும் சாப்பாட்டுடன் ஒப்பிட்டுப் பேசிய கருத்து சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது.
“வீட்டு சாப்பாடு மனைவி மாதிரி, ஹோட்டல் சாப்பாடு நடிகை மாதிரி; ஒரு மாற்றத்துக்காக ஹோட்டலில் சாப்பிடலாம், ஆனால் தினமும் சாப்பிட்டால் பைத்தியம் பிடித்துவிடும்” என அவர் பேசியது பலத்த விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
சிவகுமாரின் இந்த உவமைக்குத் திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “பெண்கள் பற்றிய உங்கள் பார்வை இவ்வளவு கீழ்த்தரமானதா? நடிகையைத் திருமணம் செய்த உங்கள் மகன் (சூர்யா) இந்தக் கருத்தை ஏற்பாரா? மருமகள் ஜோதிகாவும் ஒரு நடிகைதான் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என சரமாரியாகக் கேள்விகளை எழுப்பி சிவகுமாரை வறுத்தெடுத்துள்ளார்.
சிவகுமார் அடிக்கடி இப்படிப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது கோலிவுட் வட்டாரமே இரண்டு பிரிவாகப் பிரிந்து காரசாரமாக விவாதித்து வருகிறது.
