இந்தியா என்றாலே அழுக்கான தெருக்கள், சுகாதாரமற்ற உணவு என வெளிநாட்டினர் மத்தியில் ஒரு தவறான பிம்பம் நிலவி வரும் நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பயண வலைப்பதிவர் குளோ ஜேட் (Chloe Jade) பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
கேரளா மாநிலம் கொச்சிக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், அங்கிருக்கும் சுத்தமான சாலைகள், பிளாஸ்டிக் கையுறை அணிந்து சுகாதாரமாக உணவு பரிமாறப்படும் முறை மற்றும் குப்பைகளே இல்லாத நடைபாதைகளைக் கண்டு வியந்து பாராட்டியுள்ளார்.
குறிப்பாக, கொச்சியில் இயங்கும் மின்சார வாட்டர் மெட்ரோ படகு போக்குவரத்தைப் பயன்படுத்திய அவர், அதன் தூய்மையையும் நவீன வசதிகளையும் பார்த்து மிரண்டு போயுள்ளார்.
View this post on Instagram
“இந்தியாவை அழுக்கு என்று பொதுப்படையாகச் சொல்லாதீர்கள், ஊடகங்கள் காட்டுவதைத் தாண்டி இந்தியா ஒரு பயணிகளின் சொர்க்கம்” என அவர் பதிவிட்டுள்ள இந்த வீடியோவிற்கு இந்திய நெட்டிசன்கள் பலரும் “உண்மையான இந்தியாவைக் காட்டியதற்கு நன்றி” எனத் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.
