ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு நபர் தனது தாய் மற்றும் மனைவியை மிகவும் கொடூரமான முறையில் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், ஆத்திரமடைந்த அந்த நபர் தனது மனைவியைக் கீழே தள்ளி சரமாரியாகத் தாக்குவதோடு, அதைத் தடுக்க வந்த தனது வயதான தாயையும் கொஞ்சமும் இரக்கமில்லாமல் அடித்துத் தள்ளுகிறார்.
One police official beating his wife and mother mercilessly.. pic.twitter.com/5J5Ado7F4i
— Indian Fight Club (@INDFightClub) March 22, 2026
இந்த பயங்கரமான சண்டையைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த நபரின் சிறு வயது மகன், தனது தாய் மற்றும் பாட்டியைக் காப்பாற்றப் போராடுவதும், அவனையும் அந்த நபர் தாக்கும் காட்சிகள் பார்ப்பவர் நெஞ்சைப் பதற வைக்கிறது.
குடும்பத் தகராறு காரணமாக நடந்த இந்த அராஜகம் குறித்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்த நபருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
