இந்தியாவின் அமைதியைக் குலைக்கத் துடிக்கும் தீவிரவாத கும்பல்களுக்குப் பாகிஸ்தான் மண்ணிலேயே மரண அடி விழுந்து வருகிறது. அந்த வகையில், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய கமாண்டரான பிலால் ஆரிப் சலாபி, பாகிஸ்தானின் முரிட்கே பகுதியில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை தொழுகை முடிந்து திரும்பியபோது, மர்ம கும்பல் ஒன்று அவர் மீது முதலில் கத்தியால் தாக்கிவிட்டு, பின்னர் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளது.
இந்தியாவில் பல பயங்கரவாதச் செயல்களுக்கு மூளையாகச் செயல்பட்ட இவர், இளைஞர்களைத் தீவிரவாத அமைப்பில் சேர்ப்பதில் கில்லாடியாகத் திகழ்ந்தவர். குறிப்பாக, ‘ஆபரேஷன் சிந்து’ மூலம் இந்தியா அழித்த லஷ்கர் தலைமையகத்திற்கு அருகிலேயே இந்தக் கொலை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனச் சொல்லப்பட்டாலும், இந்தியாவின் முக்கிய எதிரிகள் வரிசையாகப் பாகிஸ்தானில் கொல்லப்பட்டு வருவது அந்நாட்டு உளவுத்துறையை நிலைகுலைய வைத்துள்ளது.
