ஐபிஎல் 2026 தொடரின் இடையே, விராட் கோலிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்வாகம் இந்தியாவிற்கும் லண்டனுக்கும் இடையே சிறப்புத் தனி விமான வசதியை வழங்கியிருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவியது. கோலி லண்டனில் இருக்கும் தனது குடும்பத்தைப் பார்ப்பதற்காக இந்த வசதி செய்து தரப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால், இந்தத் தகவல் முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது என்பதை விராட் கோலி தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். தன்னைப் பற்றி பரவிய இந்த வதந்தியை முறியடிக்க விராட் கோலி ஒரு சுவாரஸ்யமான வழியைக் கையாண்டார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்தச் செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்து, அதற்குப் பதிலடியாக இரண்டு சிரிப்பு எமோஜிகளை பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் அந்தச் செய்தியில் துளியும் உண்மையில்லை என்பதை அவர் நகைச்சுவையுடன் தெளிவுபடுத்தியுள்ளார். கோலியின் இந்த அதிரடியான பதில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது.
