ஐபிஎல் 2026 தொடர் தொடங்குவதற்கு முன்பே சன்ரைசர்ஸ் ஐதராபாத் முகாமில் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற அணிக்குள்ளான பயிற்சிப் போட்டியின் போது, அதிரடி வீரர் இஷான் கிஷன் ஆட்டமிழந்த விதம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட ‘செண்ட்-ஆஃப்’ தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

மேலும் ஜீஷான் அன்சாரியின் பந்துவீச்சில் இஷான் கிஷன் ஆட்டமிழந்தபோது, சக வீரர் என்ற பாகுபாடின்றி மிகவும் ஆக்ரோஷமான முறையில் அவர் வழியனுப்பப்பட்டார். அணியின் வெற்றிக்காக வீரர்கள் எந்தளவுக்கு தீவிரமாக இருக்கிறார்கள் என்பதை இந்தச் சம்பவம் வெளிப்படுத்தினாலும், சக வீரரிடமிருந்து இவ்வளவு ஆக்ரோஷத்தை இஷான் கிஷன் எதிர்பார்க்கவில்லை என்பது அவர் முகபாவனையிலேயே தெரிந்தது.

“>

 

இந்தக் காணொளி வைரலாகி வரும் நிலையில், சன்ரைசர்ஸ் அணியின் உள்நாட்டுப் போட்டி எவ்வளவு சவாலானதாக இருக்கிறது என்பதை இது உணர்த்துகிறது. களத்தில் நண்பர்களாக இருந்தாலும், போட்டியின் போது எதிராளியாகவே கருதும் இத்தகைய மனநிலை அணியின் வெற்றிக்கு உதவும் என ஒரு தரப்பினர் கூறினாலும், இது தேவையில்லாத மோதல்களுக்கு வழிவகுக்குமோ என்ற அச்சமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.