நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே வளர்ப்பு நாய் ஒன்று தாய் மற்றும் மகளை ஓட ஓட விரட்டி கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேதாரண்யம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் மற்றும் அவரது சிறுமி மகள் மீது, அந்த வழியாக வந்த வளர்ப்பு நாய் திடீரென பாய்ந்து பயங்கரமாகத் தாக்கியது.

இதில் படுகாயமடைந்த இருவரும் வலியால் துடித்த நிலையிலும், நாயின் உரிமையாளர் அதைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்ததாகக் கூறப்படும் தகவல் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். வளர்ப்பு நாய்களை முறையாகப் பராமரிக்காமல் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.