ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கோப்பையை வெல்வதே தனது ஒரே இலக்கு என்று தெரிவித்துள்ளார். அணியின் புதிய சீருடை அறிமுக விழாவில் பேசிய அவர், கடந்த முறை நூலிழையில் நழுவிய வெற்றியை இந்த முறை பிடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறினார்.

ரசிகர்கள் மற்றும் அணியின் எதிர்பார்ப்புகள் தனக்கு ஒரு சவாலாகவும், உற்சாகமாகவும் இருப்பதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.கடந்த 2025-ம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில், பெங்களூரு அணியிடம் வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று பஞ்சாப் அணி கோப்பையைத் தவறவிட்டது. அந்த ஏமாற்றத்தைத் தீர்க்கும் வகையில், இந்த சீசனில் தனது முதல் போட்டியில் வருகிற 31-ம் தேதி குஜராத் அணியை நியூ சண்டிகரில் பஞ்சாப் எதிர்கொள்கிறது.

ஸ்ரேயாஸ் ஐயரின் தலைமையின் கீழ் பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த ஆண்டு தனது முதல் ஐபிஎல் மகுடத்தைச் சூடுமா என்ற ஆவலில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்