ஐபிஎல் 2026 சீசனில் தனது சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தீவிரமாகத் தயாராகி வருகிறது. இந்நிலையில், ஆர்சிபி அணியின் வலைப்பயிற்சியின் போது அனுபவ வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் வீசிய ஒரு ‘தெறி’ யார்க்கர் பந்தில், நட்சத்திர பேட்டர் விராட் கோலி நிலைதடுமாறிப் போன வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
கடந்த ஏலத்தில் 10.75 கோடிக்கு வாங்கப்பட்ட புவி, தனது பழைய ஃபார்முக்குத் திரும்பி கோலிக்கே சவால் விட்டிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் காயம் காரணமாக ஆரம்பப் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று உறுதியாகியுள்ள நிலையில், ஆர்சிபி அணியின் பந்துவீச்சை வழிநடத்தும் பொறுப்பு புவனேஷ்வர் குமார் வசம் வந்துள்ளது.
This yorker from Bhuvneshwar Kumar completely beat Virat Kohli.🫡
In the last two years, Bhuvneshwar Kumar’s name has gone a bit down, but maybe in this IPL he will definitely do something special.🙌 pic.twitter.com/L0bF9BsR0Z
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) March 19, 2026
கடந்த சீசனில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபி முதல்முறை கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த புவி, இந்த முறையும் அதே வேகத்தில் மிரட்டி வருகிறார். மார்ச் 28-ல் தொடங்கவுள்ள முதல் போட்டிக்காக ராசிக் சலாம், மங்கேஷ் யாதவ் போன்ற இளம் வீரர்களுக்குக் கோலியும் புவியும் வழிகாட்டி வருகின்றனர். பெண்களுக்கான கோப்பையைத் தொடர்ந்து, ஆண்களுக்கான கோப்பையையும் தக்கவைக்க ஆர்சிபி படை இப்போது முழு வீச்சில் தயாராகிவிட்டது!
