ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு முன்பே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ‘மாஸ்’ ஆட்டத்தைத் தொடங்கிவிட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து ட்ரேடிங் முறையில் சிஎஸ்கே-வுக்கு மாறியுள்ள சஞ்சு சாம்சன், தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் ‘தல’ தோனியுடன் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
He doesn’t walk into our home…
he belongs here. 💛Welcome home, Sanju Samson. 🦁#WhistlePodu #Dencoming pic.twitter.com/CFRxK7qucc
— Chennai Super Kings (@ChennaiIPL) March 19, 2026
இது தொடர்பாக சிஎஸ்கே வெளியிட்ட வீடியோவில், தோனியும் சஞ்சுவும் ஆழமான ஆலோசனையில் ஈடுபடும் காட்சிகள் “இது எப்போதுமே விதிதான் சஞ்சு” என்ற கேப்ஷனுடன் வைரலாகி வருகிறது. உலகக்கோப்பை நாயகன் சஞ்சு சாம்சன் மஞ்சள் உடையில் தோனியுடன் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து உருக்கமாகப் பேசியுள்ள சஞ்சு சாம்சன், “தோனியுடன் ஒரே டிரெஸ்ஸிங் ரூமில் இருக்க வேண்டும் என்பது எனது வாழ்நாள் கனவு. அவருடன் அமர்ந்து காலை உணவு சாப்பிடுவது, பயிற்சி எடுப்பது மற்றும் விளையாடுவது என அனைத்தையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இந்த சீசனில் சிஎஸ்கே-வின் துணை கேப்டனாகச் சஞ்சு சாம்சன் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
𝘛𝘩𝘪𝘴 𝘸𝘢𝘴 𝘢𝘭𝘸𝘢𝘺𝘴 𝘥𝘦𝘴𝘵𝘪𝘯𝘺, 𝘚𝘢𝘯𝘫𝘶 ✨#WhistlePodu #Yellove pic.twitter.com/3xszspnsDd
— Chennai Super Kings (@ChennaiIPL) March 20, 2026
மார்ச் 30-ஆம் தேதி குவஹாத்தியில் நடைபெறும் தனது முதல் போட்டியிலேயே, தனது பழைய அணியான ராஜஸ்தான் ராயல்ஸை சஞ்சு சாம்சன் எதிர்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில், தோனியின் வழிகாட்டுதலில் சிஎஸ்கே தனது 6-வது கோப்பையை நோக்கிப் பாயத் தயாராகிவிட்டது.
