அரசுப் பேருந்து விபத்துகள் அதிகரித்து வருவது குறித்து தவெக கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ள அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
திமுக அரசு எவ்வித நிர்வாகத் திறமையுமின்றி ஓட்டை, உடைசல் பேருந்துகளை வைத்துப் பொதுமக்களின் உயிரோடு விளையாடி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மகளிருக்கு இலவசப் பயணம் என்று தம்பட்டம் அடிக்கும் முதல்வர் ஸ்டாலின், அந்தப் பேருந்துகள் பாதுகாப்பாக உள்ளனவா என்பதை ஒரு முறையேனும் கவனித்தாரா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
போக்குவரத்துத் துறையில் ஊழல் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டுள்ள அமைச்சருக்குப் பயணிகளின் பாதுகாப்பு குறித்து அக்கறை இல்லை என்று சாடியுள்ள அருண்ராஜ், மக்களின் உயிர் மீது அக்கறையற்ற திமுக ஆட்சியை வருகிற தேர்தலில் மக்கள் விரட்டியடிக்கத் தயாராகிவிட்டதாக ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.
