ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் 1350 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பலத்த விமர்சனங்களையும் தடைகளையும் சந்தித்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ‘துரந்தர் 2’ நேற்று முன்தினம்(மார்ச் 19) வெளியானது.
முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 230 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து இத்திரைப்படம் இந்திய சினிமாவில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.தொழில்நுட்பக் காரணங்களால் தென்னிந்திய மொழிகளில் இந்தப் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. குறிப்பாகத் தமிழகத்தில் சென்சார் சிக்கல்கள் காரணமாகத் தமிழ் பதிப்பு நேற்று வெளியாகவில்லை.
<a href=”http://
Badle ki aag bhadak uthi hai!
⁰Book Your Tickets Now.
🔗- https://t.co/9oK8N3aDD6 #DhurandharTheRevenge is now in cinemas worldwide.Hindi | Telugu | Tamil | Kannada | Malayalam @RanveerOfficial @rampalarjun @duttsanjay @ActorMadhavan #AkshayeKhanna #SaraArjun @bolbedibol… pic.twitter.com/0lcvb62OD6
— Jio Studios (@jiostudios) March 20, 2026
“>
இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், தற்போது அந்தப் பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு ‘துரந்தர் 2’ படத்தின் தமிழ் பதிப்பு இன்று (மார்ச் 21) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
