இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனிக்கு இந்தியாவில் கிடைக்கும் மரியாதை குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வியந்து பாராட்டியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை சமயத்தில் இந்தியா முழுவதும் பயணம் செய்த தோனியைப் பார்த்தபோது, அவருக்கு ஒரு நாட்டின் பிரதமருக்கு இணையான பாதுகாப்பு வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பிரதமருக்குரிய பாதுகாப்பு தோனிக்கு – மைக்கேல் வாகன்#MichaelVaughan | #MSDhoni | #Dhoni pic.twitter.com/oUr7K1hyg0
— PttvOnlinenews (@PttvNewsX) March 18, 2026
“>
சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்தியாவில் இவ்வளவு பெரிய கௌரவத்தைப் பெறும் வீரராகத் தோனி திகழ்வதாகவும், அவர் எங்கு சென்றாலும் உண்மையான ராணுவப் பாதுகாப்பே இருப்பது போன்ற பிரம்மாண்டமான சூழல் நிலவுவதாகவும் வாகன் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
