இந்திய கிரிக்கெட்டின் இரு துருவங்களாகக் கருதப்படும் எம்.எஸ். தோனி மற்றும் விராட் கோலி இடையிலான நட்பு மற்றும் களத்தில் அவர்களுக்குள் இருக்கும் புரிதல் (Chemistry) குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு பதிவு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, ரன்கள்  எடுக்க  ஓடும்போது இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலேயே, கண்ணசைவிலேயே மூன்று ரன்களை ஓடி எடுக்கும் வேகம் இன்றும் கிரிக்கெட் உலகில் ஒரு பாடமாகவே பார்க்கப்படுகிறது. “தோனி மற்றும் கோலிக்கு இடையே வார்த்தைகளே தேவையில்லை; அவர்களின் புரிதலும் அந்த மூன்று ரன்களுமே போதும்” என ரசிகர்கள் தங்களது பழைய நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

“>

தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், கோலி இன்னும் தீவிரமாக விளையாடி வரும் நிலையிலும், இவர்கள் இருவருக்கும் இடையிலான ‘பாண்டிங்’ (Bonding) இந்திய கிரிக்கெட்டின் பொற்காலமாக இன்றும் கொண்டாடப்படுகிறது.