நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி அதனை விமர்சித்துப் பேசியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தரப்பில் யாரும் விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், எந்தக் கட்சியும் கூட்டணிக்குச் சேர்த்துக் கொள்ளாத சூழலில் அவர் தனித்துதான் நின்று ஆக வேண்டும் என்றும் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
“யாரும் சேர்த்துக் கொள்ளவில்லை என்றால் தனித்துதானே நிற்க வேண்டும்” – அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சென்னையில் பேட்டி#AIADMK #RajendraBalaji #ElectionStrategy #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/Md8qBnvDf8
— News18 Tamil Nadu (@News18TamilNadu) March 18, 2026
“>
விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது தனித்துப் போட்டி முடிவை அதிமுக மேலிடம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பதையே ராஜேந்திர பாலாஜியின் இந்தப் பேச்சு உணர்த்துகிறது.
