புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில அரசியலில் யாரும் எதிர்பார்க்காத ஒரு மெகா திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் முதல்வர் ரங்கசாமி, பாஜக-வுடன் கூட்டணி தொடர வேண்டும் என்றால் புதுச்சேரிக்கு ‘மாநில அந்தஸ்து’ வழங்கப்பட வேண்டும் என்ற அதிரடி நிபந்தனையை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்தக் கோரிக்கையை இப்போதே நிறைவேற்றினால் மட்டுமே கூட்டணி சாத்தியம் என்று அவர் திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகத் தெரிகிறது.

​ஒருவேளை பாஜக இந்தக் கோரிக்கையை நிறைவேற்றத் தவறினால், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) கூட்டணி அமைத்துப் போட்டியிட ரங்கசாமி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. புதுச்சேரியில் ஏற்கனவே விஜய்யின் கட்சிக்கு நல்ல வரவேற்பு உள்ள நிலையில், ரங்கசாமியின் இந்த புதிய ‘மூவ்’ பாஜக-வை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏப்ரல் 9-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள சூழலில், இந்த கூட்டணி குழப்பத்தால் புதுச்சேரி அரசியல் களம் தற்போது உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.