திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக் கூடத்தைத் திறந்து வைப்பதற்காக அமைச்சர் நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் வருகை தந்திருந்தனர். அமைச்சரைக் கண்டதும் தங்களது குறைகளைச் சொல்ல ஏராளமான மக்கள் அங்கு முண்டியடித்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, கூட்டத்தில் இருந்த ஒரு மூதாட்டி மின்னல் வேகத்தில் வந்து அமைச்சர் நாசரின் காலில் விழுந்து விட்டார். தங்களது குறைகளைத் தீர்க்க வேண்டும் என அந்தத் தாய் கதற, அங்குச் சூழ்நிலை சட்டென மாறியது.
அமைச்சர் காலில் விழுந்த மூதாட்டி..! – சட்டென TENSION-ஆன COLLECTOR#Collector #Minister #Thiruvallur pic.twitter.com/b37GdeyuSa
— Galatta Media (@galattadotcom) March 16, 2026
மூதாட்டியின் இந்தச் செயலைச் சற்றும் எதிர்பார்க்காத மாவட்ட ஆட்சியர், அந்த இடத்திலேயே செம டென்ஷன் ஆகிவிட்டார். “ஏன் இப்படிப் பண்றீங்க? கோரிக்கையை மட்டும் சொல்லுங்க.. இப்படி காலில் எல்லாம் விழாதீர்கள்!” என்று அமைச்சரின் முன்னிலையிலேயே அந்தப் பாட்டியை நோக்கி ஆவேசமாகக் கத்தினார். கலெக்டரின் இந்த அதிரடியான கோபத்தைப் பார்த்த அமைச்சரும் அங்கிருந்த அதிகாரிகளும் ஒரு நிமிடம் திகைத்துப் போயினர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி, “ஆட்சியரின் கோபம் சரியா? தவறா?” எனப் பெரும் விவாதத்தையே கிளப்பியுள்ளது
