“கல்வி என்பது ஒருவருக்குக் கிடைத்த வரம்” என்பதை மறந்து, தேர்வு முடிந்த கையோடு புத்தகங்களைக் கிழித்துச் சாலையில் எறிந்து கொண்டாடும் இன்றைய தலைமுறையினரின் செயல் சமூக ஆர்வலர்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது. ஏழை மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் அந்தப் புத்தகங்களைக் கொடுப்பதற்குப் பதிலாக, அதைச் சின்னச் சின்னதாகக் கிழித்துச் சிதறடித்த மாணவர்களின் செயலைக் கண்டு அவ்வழியே சென்ற ஒரு நபர் அதிர்ச்சியடைந்தார்.
What is wrong with this Generation.
Instead of giving books to people who need them. They tear books after exam. A man stopped and gave them perfect treatment. pic.twitter.com/hdzkjnlUcG
— 🇮🇳 𝓐 𝓙 ☀️ (@warrior_soul13) March 16, 2026
சற்றும் தாமதிக்காமல் அந்த மாணவர்களைத் தடுத்து நிறுத்திய அவர், அவர்களுக்குத் தகுந்த முறையில் அறிவுரை கூறி ‘தரமான சிகிச்சையை’ அளித்துள்ளார். “உங்களுக்குத் தேவையில்லை என்றால் மற்றவர்களுக்குக் கொடுங்கள், அறிவைத் தரும் புத்தகத்தைச் சீரழிக்காதீர்கள்” என அவர் ஆக்ரோஷமாகப் பேசிய வீடியோ இப்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த நபரின் இந்தத் துணிச்சலான செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், மாணவர்களின் இத்தகைய போக்கு கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது
