இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிருடன் தான் இருக்கிறார் என்பதை உலகிற்கு நிரூபிக்க, இஸ்ரேல் வெளியிட்ட “காபி ஷாப்” வீடியோ இப்போது பெரும் சிரிப்பாய் மாறியுள்ளது. ஒரு வீடியோவில் நெதன்யாகுவின் கையில் 6 விரல்கள் இருந்தது அம்பலமான நிலையில், அவர் ஒரு காபி ஷாப்பில் அமர்ந்து காபி குடிப்பது போன்ற இரண்டாவது வீடியோவை இஸ்ரேல் வெளியிட்டது. ஆனால், “இது அச்சு அசல் ஏஐ (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலி வீடியோ” எனப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் ஆதாரத்துடன் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Just in: Iran's new Supreme Leader seen alive, visiting the same cafe as Netanyahu
Also proving he has 5 fingerspic.twitter.com/C6i3qeULBJ https://t.co/pRwoC4saHG
— Mario Nawfal (@MarioNawfal) March 16, 2026
இதைக் கேள்விப்பட்ட ஈரான், இஸ்ரேலை ஓப்பனாகவே கிண்டல் செய்யத் தொடங்கிவிட்டது. ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி, நெதன்யாகு எந்த காபி ஷாப்பில் அமர்ந்து வீடியோ எடுத்தாரோ, அதே போன்ற ஒரு செட்டிங்கில் அமர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். “உயிரோடு இருப்பதை நிரூபிக்க இப்படித் தான் போலி வீடியோ போட வேண்டுமா?” என ஈரான் மறைமுகமாகக் கலாய்க்க, இப்போது “யார் சொல்வது உண்மை?” எனத் தெரியாமல் உலக நாடுகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன. இந்த டிஜிட்டல் போர் இப்போது எல்லைகளைத் தாண்டி இணையதளத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது!
