தமிழக அரசியலில் புயலைக் கிளப்பிய தவெக-அதிமுக கூட்டணி வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதிமுக தரப்பில் 80 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி என மெகா ஆஃபர் வழங்கப்பட்டு, பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியான தகவல் காட்டுத்தீயாய் பரவியது. இது ஒருபுறமிருக்க, பாஜக, சசிகலா மற்றும் ராமதாஸ் ஆகியோருடனும் தவெக ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கசிந்தன.
இந்நிலையில், இந்த செய்திகள் அனைத்தும் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற வதந்திகள் என தமிழக வெற்றிக் கழகம் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது. “நாங்கள் யாருடனும் கூட்டணி குறித்து பேசவில்லை; பரப்பப்படும் பொய்ச் செய்திகளை தொண்டர்களும் பொதுமக்களும் நம்ப வேண்டாம்” என அக்கட்சி தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது. தவெக-வின் இந்த திடீர் விளக்கத்தால், கூட்டணி கணக்குகளைப் போட்டுக் கொண்டிருந்த அரசியல் கட்சிகள் தற்போது திகைத்துப் போயுள்ளன.
