சொந்த கார் வைத்திருப்பவர்களுக்கும், நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கும் பெரும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஃபாஸ்டேக் கட்டணங்களை உயர்த்தி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
வரும் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் புதிய நிதியாண்டு தொடங்க உள்ள நிலையில், சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் ஃபாஸ்டேக் ஆண்டு சந்தா கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
அதன்படி, இதுவரை ஆண்டுக்கு 3,000 ரூபாயாக இருந்த ஃபாஸ்டேக் சந்தா கட்டணம், இனி 3,075 ரூபாயாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1 முதல் இந்த புதிய கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளதால், வாகன ஓட்டிகள் தங்களின் பாக்கெட்டிலிருந்து கூடுதலாக 75 ரூபாயை செலவிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
