தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து, அவற்றுக்கான தேர்தல் தேதிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் பின்வரும் தேதிகளில் நிறைவடைகின்றன, அதன்பஞி மேற்கு வங்காளம்: மே 7, தமிழகம்: மே 10 (16-வது சட்டசபை), அசாம்: மே 20, கேரளம்: மே 23, புதுச்சேரி: ஜூன் 15

இந்த நிலையில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி அரசு தரப்பில் புதிய திட்டங்களையோ, சலுகைகளையோ அல்லது வாக்காளர்களைக் கவரும் வகையிலான அறிவிப்புகளையோ வெளியிட முடியாது.

அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மேற்கொள்ளும் பிரசாரச் செலவுகள் அனைத்தும் முறைப்படி கண்காணிக்கப்பட்டு, அவர்களது தேர்தல் கணக்கில் சேர்க்கப்படும்.

தேர்தல் முடியும் வரை அரசு அதிகாரிகள் மற்றும் இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்தின் நேரடிப் பார்வையில் இயங்கும்.

மேலும் இந்த அறிவிப்பால் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் அரசியல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.