உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனின் நக்ரோண்டா பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, சாலையைக் கடக்க முயன்ற சிறுவன் மீது மோதி கொடூரமாக ஏறிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் அங்கிருந்து உடனடியாகத் தப்பியோடிய நிலையில், ஆத்திரமடைந்த பொதுமக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியிருப்பு பகுதிகளில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், குற்றவாளியை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மற்றொரு சோகமான சம்பவமாக, உத்தரப் பிரதேசத்தின் குஷிநகர் மாவட்டத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர். திங்கட்கிழமை இரவு தம்குஹிராஜ் பகுதியில் நடந்த இந்த விபத்தில் விஜய் குப்தா, தீபு பிரசாத் மற்றும் சோட்டே பிரசாத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
उत्तराखंड के देहरादून में कार ने बच्चे को कुचल दिया और चालक मौके से फरार हो गया. घटना CCTV में कैद हुई.#deharaadoon, #uttaraakhand #CCTV pic.twitter.com/ZJWdgpUJtc
— NBT Hindi News (@NavbharatTimes) March 13, 2026
“>
இதில் படுகாயமடைந்த மற்றொரு இளைஞர் கோரக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த அடுத்தடுத்த விபத்துச் சம்பவங்கள் அந்தந்தப் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.
