ஈரானில் குத்ஸ் தினத்தை முன்னிட்டு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அதிபர் மசூத் பஜேஷ்கியன் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்கள் தெஹ்ரான் வீதிகளில் அச்சமின்றி வலம் வந்தனர்.
மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் நினைவாகவும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த வேளையில், இந்தத் தலைவர்கள் எவ்வித பயமுமின்றி பொதுமக்கள் மத்தியில் நடந்து சென்றனர்.
இவர்கள் பதுங்கு குழிகளில் மறைந்திருப்பதாகப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தாங்கள் களத்தில் உறுதியாக இருப்பதை உலகுக்குக் காட்டும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.
பாலஸ்தீன மக்களுக்கு எதிரான அநீதிகளைக் கண்டிக்கும் வகையில் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை ‘குத்ஸ் தினம்’ அனுசரிக்கப்படுகிறது. இந்த முறை காமேனியின் மறைவுக்குப் பிந்தைய 13-வது நாளில் மக்கள் வீதிகளில் திரண்டு தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இலக்குகளாகக் கருதப்படும் பஜேஷ்கியன் மற்றும் அலி லாரிஜானி போன்ற தலைவர்கள், நேரடித் தாக்குதல் அச்சுறுத்தல் இருந்தபோதிலும் ஊடகவியலாளர்களைச் சந்தித்துத் துணிச்சலாகப் பதிலளித்தனர்.
Iran’s President Pezeshkian attends International Quds rallies in Tehran, takes selfies with people attending the event.
Follow: https://t.co/mLGcUTS2ei pic.twitter.com/CET2mQFAli
— Press TV 🔻 (@PressTV) March 13, 2026
“>
ஈரானின் மிக சக்திவாய்ந்த தலைவர்களாகக் கருதப்படும் இவர்கள், இக்கட்டான போர்ச் சூழலிலும் நிம்மதியான மனநிலையில் தெருக்களில் இறங்கியது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
