சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1200 ரூபாய் வரையில் குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 வரையில் குறைந்து ஒரு சவரன் 1,19,200 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 16,254 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,30,032 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 290 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,90,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது