ஒடிசாவின் தேவ்கர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், மனிதநேயத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. தனது மனைவியுடன் ஏற்பட்ட அற்பத் தகராறில், 52 வயது ரமேஷ் கரியா ஒரு காட்டுமிராண்டியைப் போல மாறி, தனது மனைவி, மருமகள் மற்றும் வெறும் 6 வயதே ஆன பேத்தியையும் கனமான ஆயுதத்தால் அடித்துக் கொன்றுள்ளார். உயிருக்கு பயந்து மருமகளின் அறைக்குள் ஓடித் தஞ்சமடைந்த மனைவியையும் விடாமல் துரத்திச் சென்று, அங்கு இருந்த மூன்று பேரையும் ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த அந்த அரக்கனின் செயல், அப்பகுதி மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
வேலை முடிந்து வீடு திரும்பிய மகன் தீரேன், தனது கண் முன்னால் தாய், மனைவி மற்றும் குழந்தை பிணமாகக் கிடப்பதைக் கண்டு நிலைகுலைந்து போனார். “வீடு முழுக்க ரத்த ஆறு ஓடுகிறது, என் 6 வயசு குழந்தையக் கூட விடலையே” என அவர் கதறியது காண்போர் நெஞ்சை உருக்கியது. தலைமறைவாக உள்ள அந்தத் தந்தை ரமேஷ் கரியாவைப் பிடிக்கப் போலீஸார் தற்போது மாநிலம் முழுவதும் வலைவீசித் தேடி வருகின்றனர்.
