தற்போது நாடாளுமன்ற மக்களவையில் உள்ள 541 எம்.பி.க்களில், 481 பேர் மட்டுமே தங்கள் மாத ஊதியத்தைப் பெற்று வருகின்றனர். இதில் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அரியானா குருஷேத்ரா தொகுதி பா.ஜ.க எம்.பி. நவீன் ஜிண்டால் மற்றும் மணிப்பூர் இம்பால் தொகுதி காங்கிரஸ் எம்.பி. டாக்டர் பிமோல் அகோய்ஜாம் ஆகிய இருவரும் தங்களுக்கு ஊதியமோ அல்லது அரசாங்கம் வழங்கும் இதர சலுகைகளோ வேண்டாம் என மறுத்துவிட்டனர்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.இவர்கள் இருவருக்கும் இடையே நிதி நிலையில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. தொழிலதிபரான நவீன் ஜிண்டாலுக்கு சுமார் 1,241 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. ஆனால், பேராசிரியரான பிமோல் அகோய்ஜாமுக்கு 97 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மட்டுமே உள்ளன.

சொத்து மதிப்பில் இவ்வளவு பெரிய இடைவெளி இருந்தபோதிலும், மக்கள் சேவையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இருவரும் தங்களின் சம்பளத்தைத் துறந்திருப்பது பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.