திரையுலகின் ‘சிந்தனைச் சிற்பி’ பார்த்திபன், தற்போது நடிகை திரிஷாவை நோக்கி வீசியுள்ள வார்த்தை அம்புகள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது பாணிக்கே உரிய நக்கலுடன் “மைக் டெஸ்டிங் 1..2.. த்ரீ.. த்ரீ..” எனத் தொடங்கிப் பேசிய அவர், திரிஷாவுக்கு 40 வயதிற்கு மேல் ஆகிவிட்டதைச் சுட்டிக்காட்டி வினோதமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
மேட்சிங் புடவை வாங்கிக் கொடுத்தால் கூட அதை உடுத்திக்கொண்டு வீட்டிலேயே இருந்திருக்கலாம் என்றும், குந்தவை என்ற பெயரில் வெளியே வந்ததால்தான் இவ்வளவு பெரிய சிக்கல் உருவானது என்றும் அவர் சாடியுள்ளார். கரூரில் ஏற்பட்ட விமர்சனங்களை விட, தற்போது அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஏற்படுத்திய பாதிப்பு மிகப்பெரியது என பார்த்திபன் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது நெருங்கிய நண்பரான நடிகர் விஜய்யின் வளர்ச்சியைப் பார்த்துத் தான் பெருமைப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், தனக்கு அடுத்தபடியாக விஜய்யின் மனைவியையே மதிப்பதாகவும், “மூன்றாவது மனுஷியைப்” பற்றிப் பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும் திரிஷாவை மறைமுகமாகத் தாக்கியுள்ளார்.
மற்ற விமர்சனங்களுக்குப் பதில் சொல்லாத திரிஷா, தனக்கு மட்டும் கண்டனம் தெரிவித்ததே தனது இந்த அதிரடிப் பேச்சுக்குக் காரணம் என அவர் விளக்கம் அளித்துள்ளார். பார்த்திபனின் இந்த “ஷார்ப்பான” பேச்சும், அவர் பயன்படுத்திய “மூன்றாவது மனுஷி” என்ற வார்த்தையும் தற்போது எக்ஸ் வலைதளத்தில் காட்டுத்தீயாய் பரவி வருவதோடு, சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
