டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு கோப்பையுடன் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜெய் ஷா ஆகியோர் கோவிலுக்கு சென்றது குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பூ சுந்தர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், “இந்த உலகக்கோப்பை ஒட்டுமொத்த தேசத்திற்குமானது; அதை மதக் கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார். இந்திய அணி வெற்றி பெறும்போது ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த கடவுளுக்கு நன்றி செலுத்துவதில் எந்தத் தவறுமில்லை என்றும், சஞ்சு சாம்சன் சிலுவை அடையாளம் இட்டுப் பிரார்த்தனை செய்வதை மதிக்கக் கூடிய நாம், சூர்யகுமார் யாதவ் கோவிலுக்குச் செல்வதை ஏன் விமர்சிக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோப்பையை எந்த மதத்தலத்திற்கு எடுத்துச் சென்றாலும் அது ஒரு இந்தியராகப் பெருமைப்பட வேண்டிய தருணமே தவிர, அதைப் பிரித்துப் பார்ப்பது குறுகிய மனப்பான்மையைக் காட்டுகிறது என குஷ்பூ விளாசியுள்ளார்.
