10ம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற ஒரு மெக்கானிக் தனது மனைவி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத முழு உறுதுணையாக இருந்து வரும் நெகிழ்ச்சியான வீடியோ இணையதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் தேர்வுக்கு அழைத்துச் சென்று திரும்பும் அந்த நபர் தனது மனைவிக்கு படிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் குடும்பத்தினருக்குத் தெரியாமல் அவரைப் படிக்க வைப்பதாகக் கூறுகிறார். ஒருவேளை அரசு வேலை கிடைத்துவிட்டால் தனது கணவரைப் பிரிந்துவிடுவீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு எனக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ எப்போதும் எனது கணவருடன் தான் இருப்பேன் என்று அந்தப் பெண் உறுதியுடன் பதிலளித்தார்.

 

மேலும் விபத்து நேர்ந்தால் பாதுகாப்பு தேவை என்பதால் தனது மனைவிக்கு ஹெல்மெட் அணிவித்து மகிழ்ந்த அந்த கணவரின் செயல் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழும் இந்தத் தம்பதியினரின் பிணைப்பு உண்மையான அன்பிற்குச் சான்றாக அமைந்துள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.