வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை (Minimum Balance) பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்ற அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது. இதில் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், இந்த மொத்தத் தொகையில் 11 ஆயிரம் கோடி ரூபாயை எச்டிஎஃப்சி (HDFC), ஐசிஐசிஐ (ICICI) போன்ற முன்னணி தனியார் வங்கிகளே வசூலித்துள்ளன. சாமானிய மக்களின் உழைப்புப் பணம் இப்படி அபராதம் என்ற பெயரில் கோடிக்கணக்கில் பறிபோவது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பொதுத்துறை வங்கிகளை விடத் தனியார் வங்கிகள் இந்த விவகாரத்தில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு, தங்கள் லாபத்தை உயர்த்திக் கொள்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. வங்கிக் கணக்கில் பணம் இல்லாத ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடம் இருந்தே இந்த மிகப் பெரிய தொகை அபராதமாகப் பெறப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி வசூலிக்கப்படும் இந்தத் தொகை, தற்போது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
