சிங்கப்பூரில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் சக்கர நாற்காலியில் இருந்த பயணிக்கு உதவிய நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிங்கப்பூரில் வசிக்கும் சினேகா என்ற இந்தியப் பெண் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
பேருந்து நிறுத்தத்திற்கு வந்ததும், ஓட்டுநர் தனது இருக்கையிலிருந்து கீழே இறங்கி வந்து, சக்கர நாற்காலியில் இருந்த பயணி பாதுகாப்பாக இறங்குவதற்குத் தேவையான சரிவுப் பாதையை அமைத்துக் கொடுத்து உதவுகிறார். ஓட்டுநரின் இந்த அன்பான செயல் சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்றுள்ளது.
சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ள இந்த வீடியோவிற்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். வெளிநாடுகளில் மாற்றுத்திறனாளிகளுக்காகப் பேருந்துகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதையும், ஓட்டுநர்கள் இதுபோன்று உதவுவது அங்கு ஒரு வழக்கமான நடைமுறையாக இருப்பதையும் நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
View this post on Instagram
“>
அதே சமயம், இந்தியாவிலும் இது போன்ற வசதிகளும் மனிதாபிமானச் செயல்களும் அதிகரிக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
